Wednesday 31 August 2011

தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது - அரிமாவளவன்

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் இனி தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது! அரிமாவளவன் அறிக்கை

31 28 2011இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன்சாந்தன்முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது.
ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது.
தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்கள் தமிழர்கள் அல்லர்.

லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை இந்தியக் கூட்டுப்படைகள் கொன்று குவித்த பிறகும்அல்லது இந்திய அமைதிப்படை இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த பிறகும்அல்லது சிங்களை இனவெறிப்படைகள் 550க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களைக் கொன்றபிறகும்அதைத் தடுக்க இந்தியப்படைகள் திராணியற்றிருக்கும்போதும் தமிழர்கள் தமிழ்நாட்டில் வசிக்கிற சிங்களவரையோ தெலுங்கர் மலையாளிகள் போன்ற பிற இனத்தவரையோ கைநீட்டிகூட அடித்ததில்லை.
இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு தமிழின எதிரிகள் தமிழரின் தலையில் தொடர்ந்து ஏறி மேய்வது இன்றைக்கு வரம்பு மீறிவிட்டது.

21 
ஆண்டுகள் சிறையில் தவித்த மூன்று அப்பாவித் தமிழர்கள் இந்தக் கொலையோடு தொடர்பு இல்லாதவர்கள் என்றும் தொடர்புடையாதாகக் கருதப்படும் சிலர் இன்றும் தலைவர்கள்போல உலா வருவதும் யாவரும் அறிந்ததே!
இருப்பினும் இந்த மூவரையும் தூக்கிலிட்டே தீரவேண்டும் என்று காங்கிரசுக் கட்சியும் அதன் எடுபிடிகளும் மூர்க்கத்தனத்தோடு மோதும்போதுகூட தமிழினம் இன்னும் அறப்போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தவேளையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தின் குரலை எதிரொலிப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மிக எளிதாகவும் இழிவாகவும் கருதிக் கொண்டு அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று டில்லி அரசு சொல்லுமானால் அது இந்தியா என்கிற கோட்பாட்டைஒற்றுமையைஒருமைப்பாட்டைச் சிதைப்பதுவேயாகும்.
அதை இனி வரவேற்பது தவிர எமக்கு வேறு வழியில்லை. ஏழு கோடித் தமிழர்களின் உணர்வும் கொந்தளிப்பும் கோரிக்கையும் உங்களைக் கட்டுப்படுத்தாது என்றால் இனி உங்களது அதிகாரமும்ஆளுமையும்அரசும் எங்களையும் கட்டுப்படுத்தாது!
நீங்கள் எப்படி ஒரு இறையாண்மையுடன் வாழ்கிறீர்களோ அதுபோன்றே தமிழ்த் தேசிய இனமும் தன் இறையாண்மையுடன் இனி வாழத் துடிக்கும்” என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி. தமிழ் இணையங்கள்

No comments:

Post a Comment