Friday 6 February 2015

சிங்கக்கொடி புகழ் சம்பந்தனும் கூத்தமைப்பும் 

தேசியத்தலைவரின் வழிநடத்தலில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 2009 மேயின் பின்னர் மேய்ப்பவன் இல்லாத பண்டிக் கூட்டம் போல நடந்து வருகின்றது. இந்தியாவின் அறிவுறுத்தலின்படி முதலில் தமிழ்தேசியத்தையும், அதை நேசிப்பவர்களையும் இழந்தது. ஆயினும் தமிழ் அவர்களைக் கைவிடவில்லை. டக்ளஸ் தேவானந்தாவுடன் ஒப்பிடும்போது இவர்கள் எமது இனத்தை காப்பாற்ற வந்தவர்கள் போன்ற பிரம்மை ஏற்பட்டது. மேலும், தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியையும் வீட்டுச்சின்னத்தையும் பாவித்து மக்களை ஏமாற்றி வாக்குப் பொறுக்கினார்கள் என்றே கூற வேண்டும். இவர்களுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சியோ அல்லது சக்தியோ இதுவரை இல்லாமல் இருந்ததும் இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு உதவியது. இன்று அந்த நிலை மாறியுள்ளது போலத் தெரிகின்றது. இவர்களுக்கு மாற்றாக, தேசியத்திலும் கொள்கையிலும் உறுதியான ஒரு கட்சியாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வளர்ந்து வருகின்றது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் சிங்கக்கொடி புகழ் சம்பந்தனின் கூத்தமைப்பை வீட்டுக்கு அனுப்புவார்கள் என நான் நம்புகிறேன்! நன்றி! 

Sunday 27 April 2014

ஈழத்தமிழர்களின் வரலாறு / History of Tamils (Tamileelam):

இன்றும் எமது மத்தியில் பலருக்கும் ஈழத்தமிழர்கள் வரலாறு தெரியாது இருப்பது வருத்தத்துக்குரிய விடயமாகும். தயவு செய்து அனைவரும் இந்தக் காணொளியைப் பார்த்து மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Wednesday 5 October 2011

புலம்பெயர் ஈழத் தமிழர்களே

புலம்பெயர் ஈழத் தமிழர்களே-உங்கள்
போக்கில் வேண்டும் மாற்றங்களே
நிலவிட வேண்டும் ஒற்றுமையே-உடன்
நீங்கிட வேண்டும் வேற்றுமையே
வலைதனில் காணும் கருத்துகளே-கவிதை
வடித்திட காரணம் பொறுத்திடுக
நிலைதனை தெளிவாய் அறிவீரே-நீர்
நிச்சியம் ஈழம் பெறுவீரே

இதுவரை நடந்ததை எண்ணாதீர்-கடந்த
எதையும் பெரிது பண்ணாதீர்
புதுவழி காணல் ஒன்றென்றே-அறப்
போரினை தொடங்குவீர் நீரின்றே
அதுவரை நடக்கும பேயாட்டம்-சிங்கள
ஆணவ நாய்களின் வாலாட்டம்
எதுவரை இந்தியா கைகொடுக்கும்-அதை
எதிர் வரும் காலம் காண்பிக்கும்

வஞ்சக சிங்களர் சொயலாலே-உங்கள்
வாழ்வில் வீசிய புய லாலே
தஞ்சம் தேடி உலக கெங்கும்-இன்றே
தங்கிப் பலரே அங்கங் கும்
பஞ்சம் இன்றி வாழ் கின்றீர்-பெரும்
பட்டம் பதவி சூழ் கின்றீர
நெஞ்சில் நிம்மதி ஒரு நாளும்-ஈழ
நினைவால் வாரா துயர் மூளும்

பிறந்த மண்ணை மறப் பீரா- விட்டுப்
பிரிந்த உறவை மறப் பீரா
திறந்த வெளியில் முள் வேலி-அங்கே
தேம்பும் மக்களை மறப்பீரா
இறந்த காலத்தை மறந் திடுவீர்-தனி
ஈழம் காண முனைந் திடுவீர்
சிறந்த முடிவை எடுப் பீரே-என
செப்பினேன் வேண்டி முடிப் பீரே

******* புலவர் சா இராமாநுசம்

Sunday 18 September 2011

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தடுமாறலாமா? பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்!

(குறிப்பு இக்கட்டுரையாளர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஆவார். இன்று ஈழத்தமிழ் மக்களின் தலைமையாக இருக்கும் தமிழரசுக்கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் சரியான வழியில் பயணிக்க வேண்டிய இத்தருணத்தில் இத்தலைமைகளின் போக்கு கவலை அளிப்பதாகவே அமைந்துள்ளது.
இதை தட்டிக்கேட்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கட்சிக்குள் இருப்பவர்களுக்குத்தான் அதிகம் உண்டு.
உள்ளிருந்தே கேள்விகளை எழுப்பி தமிழ் மக்களின் அரசியல் தலைமையை சரியான பாதையில் பயணிக்க வைக்கும் முயற்சியாக  இக்கட்டுரையை நாம் வெளியிடுகிறோம்.
இது போன்ற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியை தினக்கதிர் தொடர்ந்து செய்யும். இதற்கு தமிழரசுக்கட்சி அல்லது தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை பதிலளித்தால் அதையும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம். தினக்கதிர் ஆசிரியர் பீடம்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வரலாற்றுச் சான்றுகளுடன் இன்றைய அரசியல் தலைமைகளை நோக்கி முன்வைக்கப்படும் கேள்விகள்
தமிழ்த் தேசிய இனம் நமது நாடு சுதந்திரமடைய முன்பும், சுதந்திரமடைந்த பின்னரும் நமது இனத்தின் விடிவை நோக்கி வந்த தீர்வுகளுக்கான சந்தர்ப்பங்கள் பலவற்றை இழந்துள்ளது.
இச்சந்தர்ப்பங்களில் அண்மையில் இந்தியத் தலைநகர் டெல்லியில் தமிழ்க் கட்சிகளின் ஒன்று கூடலும் ஒன்றாகிவிட்டது என்பதை நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.
அதுவும் அறுபது ஆண்டுகால கட்டத்தில் எமது மக்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்ற ஒரு கட்டத்தில், தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் எமது உறவுகள் எமக்காகக் குரல் கொடுத்து அந்த நாடுகளில் எமது பிரச்சினையின் ஆழத்தையும் அகலத்தையும் அவற்றுக்கு விளக்கி எமது நியாய பூர்வமான அபிலாஷைகளை உலகம் இன்று அங்கீகரிக்கும் நிலையில், எமது தாயகத்திலுள்ள தமிழ்த் தலைவர்கள் அடி அத்திவாரத்திலிருந்தே ஈடாடி தளம்பித் தடுமாறிச் செல்வதை நோக்கும் போது எமது மக்கள் செய்த தியாகத்திற்கு இவர்கள் அளிக்கும் கௌரவம் இது தானா என்று கவலைப்படவேண்டியுள்ளது.
தமிழரும் சுய நிர்ணய உரிமையும்
தமிழருக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு என்ற கருத்தை முன்வைத்த பெருமை இலங்கைக் கம்யூனிஸ்ற் கட்சிக்கே உண்டு. 1944 ஆம் ஆண்டு பீட்டர் கெனமனும், வைத்தியலிங்கமும் கூட்டாகக் கையெழுத்திட்டு ஒரு மகஜர் அன்றைய இலங்கைத் தேசியக் காங்கிஸிக்கு அனுப்பியிருந்தனர்.
அதில் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை இவர்கள் தனித்தேசிய இனமாக அடையாளங்கண்டு இவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு மட்டுமல்ல பிரிந்து போகும் உரிமையும் உண்டு எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இருந்தும் தமிழ் மக்களைத் தனித் தேசிய இனமாக அடையாளங்கண்டு இதன் பாரம்பரிய தாயகம் வட, கிழக்கு மாகாணங்களே என்றும் இதனால் அவர்களுக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு எனக் கூறி இதற்காகப் போராடும் ஒரு இயக்கமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து இவ்விலக்கை நோக்கிப் பயணம் செய்த பெருமை தந்தை செல்வநாயகத்திற்கும் அவருடன் இணைந்து போராடிய தளபதிகளுக்குமே உண்டு.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பம்
இக்கட்சியின் ஆரம்பக் கூட்டம் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மருதானையிலுள்ள அரசாங்க லிகிதர் சேவைச் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. அப்போது தந்தை செல்வநாயகம் கூட்டத்தின் தலைவராகவும் ஏக மனதாகத்தெரியப்பட்டதைத் தொடர்ந்து தமது தலைமைப் பேருரையை நிகழ்த்தியதோடு ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தார்.
அதாவது  ”இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக உழைக்கும் தொண்டர்கள் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி மருதானை அரசாங்க லிகிதர் சேவைச் சங்கக் கட்டிடத்தில் கூடிய கூட்டம் நியாயமற்றதும் பல மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டிற்கு ஏற்காததுமான இன்றைய ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ், இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மேன்மேலும் கீழான நிலைக்கு தாழ்த்தப்படுவதை உணர்ந்து, தமிழ் பேசம் மக்கள் இந்நாட்டில் சுதந்திரமும் சுயமரியாதையுமுள்ள பிரஜைகளாக வருங்காலத்தில் வாழ்வதற்குப் பாதகமான சட்டங்களை ஆக்குவதையும் நிர்வாக நடவடிக்கைகள் ஆற்றுவதையும் மேற்கொண்டிருக்கும் இன்றைய அμசாங்கத்தின் கொள்கையின் நோக்கத்தையும் ஆபத்தையும் அறிந்து நாட்டின் ஒற்றுமைக்குப் பாதகமற்ற முறையில் இந்த அடிப்படைப் பிரச்சினைகளை நீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்ப்பதற்கு ஓர் வழி ஐக்கிய இலங்கைச் சமஷ்டியின் ஓர் அங்கமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு சுயாட்சி அரசை நிறுவுவதே என்பதைத் தெளிவாகக் கண்டு இலங்கை தமிழரசுக் கட்சியாக அமைந்து இந்நாட்டுத் தமிழ்பேசும் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ‘சுயாட்சி’ என்ற இலக்கை அடைவதற்கு இடையறாது உழைக்க உறுதி பூண்டு தமிழ் பேசும் மக்களின் தேசிய நிறுவனமாக இயங்குவதென்று தீர்மானிக்கிறது.
கூடி இருந்த பிரதிநிதிகள் அத்தனை பேரும் ஏகமனதாக ஆர்ப்பரித்து ஆதரித்த இத்தீர்மானமே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தோற்றமாகும்.
முதலாவது தேசிய மகாநாடு 1951 தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகியன தந்தை செல்வநாயகம் தலைமையில் ஏப்ரல் மாதம் 1951 ஆம் ஆண்டு 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டிலும் முதலாவது தீர்மானமாக முன்மொழியப்பட்டது.
அதாவது;  ”பரிபூரண அரசியல் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு ஒவ்வோர் இனத்திற்கும் பிரிக்கவொண்ணாத உரிமை உண்டென்பதாலும் அவ்வுரிமையின்றி அவ்வினத்தின் ஆன்மீக, கலாசார தார்மீகப் பொலிவு சீரழிந்து விடுமென்பதாலும், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனமென்று கணிப்பதற்கான ஒவ்வோர் அடிப்படைத் தகுதிகளிலும் (அதாவது முதலாவதாகக் குறைந்த பட்சம் சிங்கள மக்களையொத்த அளவுக்காவது புரதனமானதும் புகழ் செறிந்ததுமான இத்தீவில் தனியொரு வரலாற்றாலும் இரண்டாவதாக ஒப்பற்றதோர் இலக்கியப் பாரம்பரியத்துடனும் இக்காலத் தேவைகள் அனைத்துக்குமே போதுமானதாகத் தமிழ் மொழியை இலங்கச் செய்யும் நவீன வளர்ச்சியுடனும் விளங்குவதான  சிங்களவர்களின் மொழியினின்றும் முற்றாக வேறுபட்ட தனியொரு மொழிவாரி மக்கள் என்ற உண்மையாலும் இறுதியாக இத்தீவின் மூன்றிலொரு பாகத்தை மேவிச் செறிந்துள்ளதான குறிப்பிடத்தக்க நிச்சயமான நிலப்பரப்பில் வசிக்கும் மக்கள் அவர்கள் என்ற காரணத்தாலும்) சிங்களவர்களினின்றும் வேறுபட்ட ஒரு தனி இனமாக அவர்கள் விளங்குகிறார்கள் என்பதாலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இம்முதலாவது தேசிய மகாநாடு, இலங்கைத் தமிழ் பேசும் இனத்திற்கென  பிரிக்க முடியாத அவர்களின் அரசியல் சுயாதீன உரிமையைக் கோருவதுடன், அடிப்படையானதும் மறுக்க வொண்ணாததுமான சுயநிர்ணயக் கோட்பாட்டுக்கிசைய மொழி வாரி அரசுகளின் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான ஒரு பொது சன வாக்கெடுப்பை நடாத்துமாறு கேட்டுக் கொள்கிறது.
தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தாயகத்தின் ஒருமைப்பாட்டையும் விளக்கும் விதத்தில் மாநாடுகள் வட, கிழக்கில் யாழ்ப்பாணம், மல்லாகம், வவுனியா, திருகோணமலை, கல்முனை போன்ற இடங்களில் நடாத்தப்பட்டது மட்டுமன்றி இம்மகாநாட்டுத் தலைமைப் பொறுப்பையும் தந்தை செல்வநாயகம், கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம், திருமலை தந்த செம்மல் என்.ஆர்.இராஜவரோதயம், பட்டிருப்புத் தளபதி சி.மு. இராஜமாணிக்கம் ‘இரும்பு மனிதன்இ.மு.வி.நாகநாதன்’ நாவலர் அ.அமர்தலிங்கம் போன்றோர் ஏற்றிருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் கிழக்குமாகாணத்தின் பட்டிருப்புத் தளபதி சி.மு. இராஜமாணிக்கம் பா.உ .
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7 ஆவது தேசிய மாநாட்டில் சி.மு.இராஜமாணிக்கம் பின்வருமாறு விளக்கினார்.
எவ்வகையாகப் பார்த்தாலும் நாம் ஒரு தேசிய இனம் என்பதற்கு ஐயமில்லை. நாம் ஒரு திட்டவட்டமான பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டிருக்கிறோம். ஒரு பொதுமொழியைப் பேசுகிறோம். கல்தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டு வளர்ந்து வந்த ஒரு தனிப்பண்பாட்டையும் பாரம் பரியத்தையும் எமது சொந்தமாகக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேசிய இனத்திற்கு இன்றியமையாத நாம் ஒன்றென்னும் உணர்ச்சியைத் தமிழ் பேசும் மக்களாகிய நாமெல்லோரும் பெற்றிருக்கிறோம்.
அத்தோடு இதே மாநாட்டில்,  ”மற்றவர் எவரும் தரக் கையேந்திப் பெறுவதல்ல சுதந்திரம். உங்கள் உரிமை உங்கள் கையிலே தங்கியிருக்கிறது. நீங்கள் உழைக்க வேண்டும். கஷ்டப்படவேண்டும். தியாகங்களைச் செய்ய வேண்டும். உயிரையும் அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்” என்றும் கூறினார்.
தலைமையுரையில் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து தெட்டத் தெளிவாக ஒரு விடயம் புலனாகின்றது. வட  கிழக்கு மக்களின் தாயகமே வட, கிழக்கு மாகாணங்கள். நாம் ஒரு தேசிய இனம் மட்டுமல்ல மூத்த குடிகளுமே என்பதாகும்.
1985 இல் திம்பு மகாநாட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது வட, கிழக்கு தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அல்ல என்பதை எடுத்துக் காட்ட இரு தமிழறிஞர்களின் கூற்றுக்களை அப்போதைய அரசாங்க குழு பயன்படுத்தியமை பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.
ஆனால் எண்பதுகளுக்குப் பின்னர் நமது நாட்டின் ஆதிக்குடியேற்றம் பற்றி பல புதிய தகவல்கள் வந்துள்ளன. பாளி நூல்கள் கூறுவது போல் சிங்கள மக்களே இந்நாட்டின் ஆதிக்கடிகள் அல்லர். அவர்கள் வட நாட்டிலிருந்தே நமது நாட்டுக்க வந்தனர் என்பதும் கட்டுக்கதையாகிவிட்டது. மாறாக கடந்த நான்கு தசாப்தங்களாக ஈழத்தின் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் சிங்கள  தமிழ் மக்களின் மூதாதையர் தென்னிந்தியாவிலிருந்து இற்றைக்கு 3000 ஆண்டுகட்கு முன்னதாக ஈழத்துக்கு வந்து விட்டனர் என்பதை எடுத்துக் காட்டியுள்ள தோடு ஈழத்தில் சிங்கள மொழிக்கு இல்லாத பழமை தமிழ் மொழிக்கு உண்டு என்பதை தொல்லியல் சான்றுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
ஈழத் தமிழரும் சிங்கள மக்களைப் போல மூத்த குடிகள் மட்டுமன்றி நாடளாவப் பரந்திருந்த இவர்கள் நாளடைவில் வட, கிழக்கு மாகாணங்களில் செறிந்து தமது கலாசாரத் தனித்துவத்துடன் வாழ இது அவர்களது பாரம்பரிய பூமியானது.
ஏன் இலங்கை  இந்திய ஒப்பந்தத்தில் கூட வட  கிழக்கு மாகாணங்கள் வரலாற்று ரீதியாக தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் தொன்மை மட்டுமன்றி தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் பற்றியும் பல மகாநாடுகளில் கலந்து கருத்துரை வழங்கவும், கட்டுரைகள் எழுதவும் நூல்களை வெளியிடவும் நமக்குச்சந்தர்ப்பம் கிடைத்தது. இப்பணியைச் சிறப்பான முறையில் ஆற்றியுள்ளோம். அண்மையில் கூட கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஒரு தென்னிலங்கைப் புத்திஜீவி நம் போன்றோர் ஈழத்தமிழரின் தொன்மை பற்றிப் பேசி வருகிறோம் என்று நம்மைச் சாடவும் தவறவில்லை.
தமிழர் தேசிய இனமே  தலைவர் அமிர்தலிங்கம்
தமிழ் மக்கள் இந்நாட்டின் மூத்த குடிகள் மட்டுமல்ல, தனித்தேசிய இனம், சுயநிர்ணய உரிமைக்குத் தற்கால உலக நியமங்களுக்கேற்பத் தகுதியான இனம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெள்ளிவிழா மலருக்கு (1974) ”இலட்சியப் பாதை” என்ற தலையங்கத்தில் தலைவர் அமிர்தலிங்கம் இருபத்தைந்து ஆண்டுகளில் தாம் சாதித்தது என்ன என்ற தலைப்பில் கூறிய வார்த்தைகளை இங்கே குறிப்பிடுவது காலத்தின் தேவையாகிறது.
”தமிழனுக்கு ஒரு தனிப் பிரதேசம் உண்டு. அதைப் பாதுகாப்பது தமிழ் மக்களின் கடமை மாத்திரமல்ல, உரிமையும் கூட என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தானும் ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறோம். தமிழ்த் தேசிய இனத்திற்குப் பிரதேச சுயாட்சி வழங்க வேண்டுமென்று நாம் ஆரம்பத்தில் கோரிய போது ”தமிழ் பிரதேசம் என்று ஒன்றில்லை என்றும் நாடு முழுவதும் எல்லோருக்கும் சொந்தம்” என்று பிதற்றிய இடதுசாரிகள்  இன்று ”தமிழ்ப் பிரதேசம் முண்டு, தமிழ்த் தேசிய இனத்திற்குப் பிரதேச சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் அதற்காகத் தாங்களும் போராடத் தயாரென்றும்” ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறோம். தமிழன் ஒரு தனித் தேசிய இனம் என்பதை உணரச் செய்திருக்கிறோம். தமிழ்த் தேசிய இனத்திற்கு தன்னாட்சி பிறப்புரிமை என்பதைத் தெரிய வைத்திருக்கிறோம்.
1957 இல் கைச்சாத்திடப்பட்ட பண்டா  செல்வா ஒப்பந்தமும் 1965 இல் உருவாகிய டட்லி  செல்வா ஒப்பந்தமும், 1987 இல் இந்திய  இலங்கை அரசுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய  இலங்கை ஒப்பந்தங்களும் தமிழரின் தாயகம் வட  கிழக்கு மாகாணங்களே என்பதை அங்கீகரித்துள்ளன. இவை அனைத்தும் தமிழ்த் தேசிய இனத்தின் விடிவிற்கான படிக்கட்டுகளே ஒழிய முற்றான தீர்வுகள் அல்ல. ஏன் இந்திய இலங்கை ஒப்பந்தமும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வில்லை என்று தலைவர்களான அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை.
இந்திய  இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட சூழல் வேறு. இன்றைய சூழல் வேறு. களத்தில் தமிழ் மக்கள் இழக்க வேண்டிய எல்லாவற்றையும் இழந்து நின்றாலும் கூட முன்னைய காலங்களை விட தமிழகச் சூழல், இந்திய மக்களிiடையே  போரின் இறுதிக் கட்ட நிகழ்வுகளுக்கான அனுதாபமும் விழிப்புணர்வும், புலம்பெயர் தமிழ் மக்களது காத்திரமான பங்களிப்பு சர்வதேச சமூகம் இனங்களின் தனித்துவத்தை அவர்களின் சுய நிர்ணய உரிமையையும் பேணுவதில் கொண்டுள்ள அக்கறை மனித உரிமை, ஜனநாயக உரிமை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்வதில் சர்வதேசம் காட்டும் அக்கறை இன்று தமிழ்த் தேசிய இனத்திற்குப் பலமான சக்திகளாக விளங்கும் போது இதனைத் தக்கவாறு நமது தீர்வுக்குப் பயன்படுத்தும் பொறுப்பு இன்றைய தலைமைகளுக்கு உண்டு என்பதை எவரும் மறுக்க முடியுமா?
இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும்.
மறைந்த நமது தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகியோரது முயற்சியாலும் பெருந் தலைவர்களான எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் ஜி.ஜி.பொன்னம்பலமும் இணைந்ததாலும் உருவாகியதே தமிழர் விடுதலைக் கூட்டணி.
1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகிய ‘தமிழ் ஈழக்’ கோட்பாட்டை முன்வைத்து இக் கூட்டணி தேர்தலில் போட்டி போட்டு பெருவாகை சூடியது. தமிழீழக் கோட்பாடு கூட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 1944 இல் கூறிய பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை வழி வந்ததே. 2002 இல் ஒஸ்லோவில் சமஷ்டியை நோக்கி உள்ளகச் சுய நிர்ணய அடிப்படையிலான தீர்வுக்கான பயணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் ஒத்துக் கொண்டன. இதனால், தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்பன கடந்த அறுபது ஆண்டுப் போராட்டத்தில் பின்னிப் பிணைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.
இத்தகைய கோட்பாட்டையே 2004 இல் உருவாகிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டுமன்றி உள்ளுராட்சித் தேர்தலிலும் முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்றது.
தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு அவசியம்
டில்லி சென்றிருந்த தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் அங்கு செல்லமுன் திம்பு பேச்சுவார்த்தையில் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளில் இணக்கங்கள் கண்டிருந்தது போன்று ஒரு இணக்கப்பாட்டை எட்டியிருத்தல் வேண்டும். இவ் விணக்கப்பாடு சாத்தியமற்றதாகக் காணப்பட்டிருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் தேசியம், தாயகம், சுயநிர்ணயக் கோட்பாட்டினை அடிநாதமாகக் கொண்டு வளர்ந்த தமிழரசுக் கட்சியும் இதனைப் பின்பற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணியும் முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து இக்கோட்பாட்டின் அடிப்படையிற்குள் நமது தீர்வு அமைதல் வேண்டும் என வலியுறுத்த நல்ல சந்தர்ப்பமிருந்தது.
அதுவும் இக்கட்சிகளுள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னணி வகிக்கும் இக் கூட்டமைப்பு மௌனம் சாதித்து, மதில் மேல் பூனை போன்று செயற்பட்டதானது இவ்வளவு காலமும் இவர்கள் மேடைகளில் உரக்கக் கத்தியமை பாராளுமன்றம் செல்லும் இவர்களின் தந்திரோபாயம் போன்றே இருக்கின்றது என்று இன்று மக்கள் குழம்பியிருக்கிறார்கள்.
இருந்தும் எதற்கும் விட்டுக் கொடுக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குரிய பணியைக் கச்சிதமாக ஒப்பேற்றிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பணி பாராட்டத்தக்கதே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மௌனமானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, இதுவரை நடந்து வந்த பாதையை விட்டு இவர்கள் விலகுகிறார்கள் என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவில் தமது இருப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டுள்ளார்கள் என்று மக்கள் மன விரக்தி அடைந்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு ‘இரட்டை வேடம்’ பூண்டுள்ளது என்ற கருத்தும் தேர்தலில் ஒரு வார்த்தை, நடைமுறையில் இன்னொருவார்த்தை, செயற்பாடு இவர்கள் மத்தியில் காணப்படுகிறது என்ற அங்கலாய்ப்பும் மக்கள் மனதில் பரவலாகக் காணப்படுகின்றது.
இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றது. இன்று அரசியல் என்பது ஒரு வியாபாரமாகிவிட்டது. கட்சிகள் வியாபார முகவர் நிலையங்களாகிவிட்டன. வழிப்போக்கர்கள் கட்சிகளில் நுழைந்து விட்டனர். பழைய தமிழரசுக் கட்சித் தலைமைகளில் காணப்பட்ட தலைமைத்துவமும் தனித்துவமும் இன்று முன்னணியில் நிற்பவர்களிடம் காணப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழரசுக் கட்சி போன்ற கட்சிகளில் வௌ;வேறு பாசறைகளில் வளர்ந்து பலன் பெற்றவர்கள் ‘தாமே கட்சியின் மூத்த உறுப்பினர்’ என்று மார்பு தட்டும் நிலைக்குக் கூட இக்கட்சி கீழிறங்கிவிட்டது என்றும் சொல்லப்படுகின்றது.
ஆரோக்கியமான கருத்துப் பரிமாறலும் உட்கட்சி ஜனநாயகமும் இல்லை. இயக்கப் பாணியில் கட்சியின் தலைவிதியை ஒரு சிலர் மட்டுமே தீர்மானிக்கும் பரிதாப நிலை. வழிப்போக்கர்கள் சிலர் கட்சியின் மூத்தோரை உதறித் தள்ளிவிட்டு கட்சியின் முக்கியஸ்தர்களாகி விட்டனர். இவர்களுக்கு தமிழ்த் தேசியமும் தெரியாது. தமிழ்த் தலைவர்களையும் அவர்கள் செய்த தியாகத்தையும் தெரியாது.
சுருங்கச் சொன்னால் நமது பழைய தலைமைகள் மக்களோடு நின்று வாழ்ந்து அவர்களது இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு செய்த தியாகங்கள் இன்றைய அரசியல் வாதிகளில் இல்லை என்றும் மக்கள் முணுமுணுக்கத் தவறவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இவர்களோ அன்றி இவர்களின் உறவுகளோ களத்தில் இல்லாததால் இழப்புகளின் தாக்கத்தை இவர்கள் உணர மாட்டார்கள் என்றும் மக்கள் கவலைப்படுகிறார்கள்.
காலத்தின் தேவை
ஆதலால் எமது நீண்ட காலப் போராட்டத்தில் எமது தலைமைகளும் மக்களும் செய்த தியாகங்கள் அளப்பரியன. இவர்கள் எமக்கு எத்தகைய தீர்வு உகந்தது என்பதைத் தெளிவாக இனங்காட்டிச் சென்றுள்ளார்கள். தமிழரசுக்கட்சியின் முதற் தேசிய மகாநாட்டின் (1951) அடிப்படையில் அமைந்த திம்பு, கோட்பாட்டின் (1985) அடிப்படையில் முன் தமிழ் மக்களுக்குரிய தீர்வு அமைதல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்கமுடியாது.
தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் ஆகிய கோட்பாடுகளை மேடைகளில் முழங்கி அவர்களின் வாக்கைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்பாதையிலிருந்து விலகிச் செல்வார்களேயானால் இவர்கள் மக்களால் தூக்கி எறியப்படும் காலம் விரைவில் வரும்.
தந்தை செல்வநாயகம் அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது தலைவர்கள் கடந்த காலங்களில் தடுமாறியதும் தவறிழைத்ததும் தமிழ் அரசியல் போராட்டத்தில் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டித் தலைவர்கள் தடுமாறித் தவறிழைத்தாலும் மக்கள் உறுதியாக நிற்பார்கள் என்று தீர்க்க தரிசனமாகக் கூறியிருந்தார்.
கடந்த உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் இதனையே எடுத்துக் காட்டுகின்றன.
ஆதலால் தமிழ் மக்களின் தீர்வு என்ன என்பதை துலாம்பரப்படுத்தும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.
இவ்வாறு இவர்கள் செய்யாவிட்டால் இவர்கள் வெறுமனே காலத்தைக் கடத்துகிறார்கள் என்றும், இவர்களிடம் தீர்வுத் திட்டம் இல்லை என்பதும் துலாம்பரமாகிவிடும் என்ற உணர்வு மக்களிடையே காணப்படுகிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் சர்வதேச மட்டத்திலும் எமக்குரிய தீர்வு பற்றி விவாதிக்கப்படும் சூழலில் நமது தலைமைகள் ஒன்றுபட்டு ஒரு தீர்வுத் திட்டத்தை வைப்பது காலத்தின் கட்டாயம். தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலே தான் எமக்குரிய தீர்வு காணப்படல் வேண்டும் என்று எமது கட்சிகள் ஒன்றாக டில்லி அரசுக்குச் சொல்லி இருந்தால் டில்லி அத்தகைய தீர்வை இலகுவில் தட்டிக் கழித்திருக்க முடியாது. சர்வதேசமும் இத்தகைய தீர்வை அங்கீகரித்திருக்கும்.
மாறிவரும் சர்வதேசச் சூழல்
தந்தை செல்வநாயகம் தமிழ் மக்கள் தனித்தேசிய இனம் என்ற கூற்றை முதல் முதலாக வைத்த போது தேசிய இனங்களின் தனித்துவத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் அக்கறை காட்டியிருந்தது. ஆனால், தந்தைக்குப் பின்னர் சென்ற நாற்பது ஆண்டுகளின் வரலாற்றில் சர்வதேசச் சூழல் மாறிவிட்டது. தேசிய இனங்களுக்குச் சுய நிர்ணய உரிமை உண்டு என்ற கோட்பாடு இன்று வலுப்பெற்றுள்ளதோடு, அவர்களின் ஜனநாயக உரிமை, தனித்துவம் ஆகியனவற்றைப் பாதுகாக்க வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் அபிலாஷைகளை அங்கீகரிக்க வேண்டும் என்ற சிந்தனையும் சர்வதேச அரங்கில் செல்வாக்குப் பெற்றுள்ளது.
தந்தையாலும் தளபதிகளாலும் தமிழரசுக் கட்சி மகாநாடுகளில் வலியுறுத்திச் சென்றது போல் தனித்துவமான பிரதேசத்தில் தனித்துவமான அடையாளங்களோடு மிக நீண்டகாலம் வாழ்ந்து வரும் இனத்தை தேசிய இனம் என்று கூறாது வேறு எந்த வார்த்தையால் அழைப்பது?
தனித்தனியான பிரதேசங்களில் வாழ்ந்த சிங்கள, தமிழ்த் தேசிய இனங்களை ஆங்கிலேயர் ஒரே நிர்வாகக் கட்டமைப்பில் ஒற்றை ஆட்சி அரசமைப்பில் ஒன்று சேர்த்தாலும் கூட அவர்கள் இத்தீவில் சிங்கள, தமிழ்த் தேசிய இனங்கள் வௌ;வேறான பாரம்பரியங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அங்கீகரிக்கத் தவறவில்லை.
அத்துடன் ஆங்கிலேய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீடுகளிலெல்லாம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் வட  கிழக்கு மாகாணங்களே என்பதை எடுத்துக் காட்டத் தவறவில்லை.
சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பாதிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டனவே என்று புள்ளி விபரங்களுடன் இன்று எச்சபையிலும் விவாதிக்க முடியும்.
இக்கருத்தினை நாம் பல கருத்தரங்குகளிலும் எடுத்துக் காட்டியுள்ளோம். நமது கருத்துக்கள் இன்று நூல் வடிவில் உள.
அத்துடன் சுதந்திரத்திற்குப் பின்னர் வட  கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட தேர்தல்களிலெல்லாம் தமிழ்த் தேசிய இனத்தின் போக்கு கொழும்பு அரசின் போக்குக்கு மாறாகவே இருந்ததை தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
ஏன் 1971, 1977 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் அப்போதைய சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன புதிய அரசியற் திட்டத்தினை உருவாக்க மக்களிடம் ஆணை கேட்ட போது வட  கிழக்கு மக்களிடம் இதற்கான போதிய ஆதரவு கிட்ட வில்லை. ஆதலால் வரலாற்று ரீதியாக பின்வந்த அரச நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் போது தமிழ்த் தேசிய இனம் தனது அடையாளத்தை பேணியமை புலனாகின்றது.
ஆயுதப் போரின் முடிவில்
தமிழ்த் தேசிய இனத்தின் நியாய பூர்வமான அபிலாஷைகள் ஆயுதப் போராட்ட காலத்தில் ‘பயங்கரவாதம்’ என்று முத்திரையிடப்பட்டு அடக்கப்பட்டாலும் கூட, ஆயுதப் போராட்டம் தோல்வியுற்று, இறுதிப் போரின் போது நடைபெற்ற அம்சங்களும், கடந்து இரண்டு ஆண்டுகளாக அரசு இனங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்ப்பதற்கான எதுவித காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தவறிய நிலையில் இன்று சர்வதேசம் தமிழ் மக்களின் நியாய பூர்வமான அபிலாஷைகளை இனங்கண்டு அவற்றுக்குப் பரிகாரம் தேடுவது அவசியம் என அக்கறை காட்டத் தொடங்கியுள்ளது.
அத்துடன் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் நியாய பூர்வமான அபிலாஷைகளை அரசுகள் அங்கீகரிக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளதால் ஒரு நியாயமான தீர்வைத் தமிழ்த் தேசிய இனத்திற்கு வழங்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்படுகின்றன.
இந்திய உபகண்ட நிலையும் சர்வதேசமும்
இந்தியாவிலும் தற்போது ஈழத் தமிழர் பால் முன் எப்போதுமில்லாத அளவுக்கு அதிக அக்கறை காட்டப்படுகிறது. தமிழகத்தில் ஜெயலலிதாவின் அரசின் காத்திரமான நடவடிக்கைகள் மத்திய அரசைச் சிந்திக்க வைத்துள்ளன. தமிழ் நாட்டு அரசினதும் தமிழ் மக்களினதும் அங்கீகாரத்துடன் தான் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அத்துடன் அகில இலங்கை ரீதியில் இடது சாரிகள் எப்போதுமே தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்குக்கு குரல் கொடுப்பவர்கள் தமிழ்த் தேசிய இனத்துக்காக குரல் கொடுக்கிறார்கள். ஏன் பாரதிய ஜனதாக் கட்சி கூட ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தைப் பேணும் வண்ணமான ஒரு தீர்வு அமைதல் வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்படுகிறது.
சர்வதேச அரங்கில் மேற்குலக ஜனநாயக நாடுகள் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அக்கறையுடன் அவதானித்து வருவதோடு இத்தேசிய இனத்தின் தனித்துவமான அடையாளத்தைப் பேணும் வண்ணமான ஒரு தீர்வை நிச்சயம் ஆதரிப்பார்கள். புலம்பெயர் தமிழ் மக்களின் அயராத உழைப்பு சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் நியாய பூர்வமான கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளை சர்வதேசம் அங்கீகரிக்கும் வண்ணம் அமைந்துள்ளன.
இவ்வாறு வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக ஈழத் தமிழ்த் தலைமைகளின் செயற்பாடு அமையக் கூடாது. மிகவும் பலமாக, திடமாக, ஒன்றுபட்டு ஒரே குரலில் நாம் நடந்து வந்த பாதையான தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடுகளைச் சர்வதேச அரங்கில் முன்வைக்க நல்ல சந்தர்ப்பம் இன்றுண்டு.
முன் எப்போதுமில்லாத சூழல் இன்றுள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்குரிய இறுதிச் சந்தர்ப்பமாகவே இது அமையப் போகிறது. இதற்கு முன்பெல்லாம் நாம் தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களைப் போல இதனையும் தவறவிடக் கூடாது.
தமிழ் மக்களைப் பொறுத்த மட்டில் தந்தை செல்வநாயகம் தீர்க்க தரிசனமாகக் குறிப்பிட்டது போல் தலைவர்கள் தவறிழைத்தாலும் மக்கள் தவறிழைக்க மாட்டார்கள். 1949 இல் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து வைத்து அவர் ஆற்றிய உரை இன்றும் பொருந்தும். 1949 இல் இருந்து வெள்ளைக்கையர்களான நமது தலைவர்களால், நாணயமான கண்ணியமான மனிதர்கள் எனப் போற்றப்பட்ட இவர்களால் தமிழினத்தின் விடிவுக்கான  தீர்வாக  நல்ல அத்திவாரமாகப் போடப்பட்ட கோரிக்கைகள் தான் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகும்.
1949 இல் இருந்து 2002 ஒஸ்லோ வரை நீடித்து நிலைத்த கோரிக்கை தான் இஃதாகும்.
நன்றி: தினக்கதிர் இணையம்.

Wednesday 31 August 2011

தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது - அரிமாவளவன்

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் இனி தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது! அரிமாவளவன் அறிக்கை

31 28 2011இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன்சாந்தன்முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது.
ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது.
தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்கள் தமிழர்கள் அல்லர்.

லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை இந்தியக் கூட்டுப்படைகள் கொன்று குவித்த பிறகும்அல்லது இந்திய அமைதிப்படை இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த பிறகும்அல்லது சிங்களை இனவெறிப்படைகள் 550க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களைக் கொன்றபிறகும்அதைத் தடுக்க இந்தியப்படைகள் திராணியற்றிருக்கும்போதும் தமிழர்கள் தமிழ்நாட்டில் வசிக்கிற சிங்களவரையோ தெலுங்கர் மலையாளிகள் போன்ற பிற இனத்தவரையோ கைநீட்டிகூட அடித்ததில்லை.
இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு தமிழின எதிரிகள் தமிழரின் தலையில் தொடர்ந்து ஏறி மேய்வது இன்றைக்கு வரம்பு மீறிவிட்டது.

21 
ஆண்டுகள் சிறையில் தவித்த மூன்று அப்பாவித் தமிழர்கள் இந்தக் கொலையோடு தொடர்பு இல்லாதவர்கள் என்றும் தொடர்புடையாதாகக் கருதப்படும் சிலர் இன்றும் தலைவர்கள்போல உலா வருவதும் யாவரும் அறிந்ததே!
இருப்பினும் இந்த மூவரையும் தூக்கிலிட்டே தீரவேண்டும் என்று காங்கிரசுக் கட்சியும் அதன் எடுபிடிகளும் மூர்க்கத்தனத்தோடு மோதும்போதுகூட தமிழினம் இன்னும் அறப்போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தவேளையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தின் குரலை எதிரொலிப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மிக எளிதாகவும் இழிவாகவும் கருதிக் கொண்டு அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று டில்லி அரசு சொல்லுமானால் அது இந்தியா என்கிற கோட்பாட்டைஒற்றுமையைஒருமைப்பாட்டைச் சிதைப்பதுவேயாகும்.
அதை இனி வரவேற்பது தவிர எமக்கு வேறு வழியில்லை. ஏழு கோடித் தமிழர்களின் உணர்வும் கொந்தளிப்பும் கோரிக்கையும் உங்களைக் கட்டுப்படுத்தாது என்றால் இனி உங்களது அதிகாரமும்ஆளுமையும்அரசும் எங்களையும் கட்டுப்படுத்தாது!
நீங்கள் எப்படி ஒரு இறையாண்மையுடன் வாழ்கிறீர்களோ அதுபோன்றே தமிழ்த் தேசிய இனமும் தன் இறையாண்மையுடன் இனி வாழத் துடிக்கும்” என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி. தமிழ் இணையங்கள்

Sunday 28 August 2011

வீரமங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்!

வீரமங்கை செங்கொடி ஏனம்மா இந்த அவசரம்?
தூக்குத்தண்டனைக்காக காத்திருக்கும் மூன்று அண்ணன்மார்களைக் காப்பாற்ற இதைவிட உனக்கு வேறு வழி தெரியவில்லையா? உனது இந்த உயிர்த் தியாகம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மெளனத்தைக் கலைக்குமா? கல்மனம் கொண்ட ஜனாதிபதி பிரதிபா பட்டில் நெஞ்சில் கருணையைப் பிறப்பிக்குமா? கொலைகாரக் காங்கிரசுக்குப் நல்ல புத்தியைப் புகட்டுமா? இத்தாலியக் கழுதை சோனியாவின் கொலை வெறியைத் தணிக்குமா? ஒரு ராஜீவின் உயிருக்காக இன்னும் எத்தனை பேரின் உயிர்களை நாம் காவு கொடுக்க வேண்டும்? தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைக் குடித்தது போதாதா? இன்னும் எத்தனை தமிழர்களின் உயிர் வேண்டும்? முடியாது! இனிமேல் எந்த தமிழரின் உயிரையும் எம்மால் பலி கொடுக்க முடியாது. உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்! இது நீயேற்றிய ஈகைத் தீயின் மீது நாம் எடுக்கும் சபதமாகும். உனது தியாகம் வீணாகப் போகாது! இது உறுதி!     

Wednesday 17 August 2011

மூன்று முத்துக்கள் தூக்கு கயிற்றில் ???

மூவேந்தர்
முறையோடு
முறையாக நல்லாட்சி
புரிந்த மண்ணில்
மூன்று முத்துக்கள்
தூக்கு கயிற்றில்
கொடுமையிலும்
கொடுமையடா
கேட்பாரில்லாமல்
கேடுகளே தொடரும்
புரிந்திடடா தமிழா
புலியென்று சொல்லிடலாம்
என்ன தவறு செய்தார்
பேரறிவாளன் பெயர் தனை
கழுவிலே எழுதி
காலடியில் வீழ்த்திட
முயற்சியாடா
தமிழக தமிழனின்
எழுச்சியை தடுக்கவே!
தூக்கு மேடை
புதிதல்ல எமக்கு
அதற்கும் மனு நீதி
வேண்டுமடா
வானரங்களின் தீர்ப்பில்
வகை யுண்டோடா
வரலாற்றை மாற்றிட
தடைகளை தகிர்த்திடு
தமிழா தமிழா

நன்றி : நிலவில் ராதா~