Wednesday 31 August 2011

தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது - அரிமாவளவன்

ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகள் டில்லியைக் கட்டுப்படுத்தாது என்றால் டில்லியும் இனி தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தாது! அரிமாவளவன் அறிக்கை

31 28 2011இந்தியா என்பது இந்திய மாநிலங்களின் கூட்டாட்சிதான். இந்தியாவிற்குள் இருக்கிற தமிழ்த் தேசிய இனத்தின் ஒருமித்த குரலைத்தான் தமிழ்நாடு சட்டமன்றம் பேரறிவாளன்சாந்தன்முருகன் ஆகியோரின் தண்டனைக் குறைப்பு பற்றிய தீர்மானத்தில் வெளிப்படுத்தியது.
ஆனால் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சித் என்பவர், “அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று சொல்வது மக்களின் குரல் எங்களைக் கட்டுப்படுத்தாது நாங்கள் தான்தோன்றித்தனமாகத்தான் செய்வோம் என்றே பொருள்படுகிறது.
தமிழக மக்கள் என்றைக்கும் நீதிக்குப் புறம்பாக செயற்படுகிறவர்கள் அல்லர். நாங்கள் தப்பானவர்களுக்காக கையேந்தி யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. எந்த வகையிலும் வன்முறையை நாடுகிறவர்கள் தமிழர்கள் அல்லர்.

லட்சம் ஈழத் தமிழர்களை இலங்கை இந்தியக் கூட்டுப்படைகள் கொன்று குவித்த பிறகும்அல்லது இந்திய அமைதிப்படை இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்த பிறகும்அல்லது சிங்களை இனவெறிப்படைகள் 550க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களைக் கொன்றபிறகும்அதைத் தடுக்க இந்தியப்படைகள் திராணியற்றிருக்கும்போதும் தமிழர்கள் தமிழ்நாட்டில் வசிக்கிற சிங்களவரையோ தெலுங்கர் மலையாளிகள் போன்ற பிற இனத்தவரையோ கைநீட்டிகூட அடித்ததில்லை.
இதையே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு தமிழின எதிரிகள் தமிழரின் தலையில் தொடர்ந்து ஏறி மேய்வது இன்றைக்கு வரம்பு மீறிவிட்டது.

21 
ஆண்டுகள் சிறையில் தவித்த மூன்று அப்பாவித் தமிழர்கள் இந்தக் கொலையோடு தொடர்பு இல்லாதவர்கள் என்றும் தொடர்புடையாதாகக் கருதப்படும் சிலர் இன்றும் தலைவர்கள்போல உலா வருவதும் யாவரும் அறிந்ததே!
இருப்பினும் இந்த மூவரையும் தூக்கிலிட்டே தீரவேண்டும் என்று காங்கிரசுக் கட்சியும் அதன் எடுபிடிகளும் மூர்க்கத்தனத்தோடு மோதும்போதுகூட தமிழினம் இன்னும் அறப்போராட்டங்களையே நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்தவேளையில் ஒட்டு மொத்தத் தமிழகத்தின் குரலை எதிரொலிப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை மிக எளிதாகவும் இழிவாகவும் கருதிக் கொண்டு அது எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று டில்லி அரசு சொல்லுமானால் அது இந்தியா என்கிற கோட்பாட்டைஒற்றுமையைஒருமைப்பாட்டைச் சிதைப்பதுவேயாகும்.
அதை இனி வரவேற்பது தவிர எமக்கு வேறு வழியில்லை. ஏழு கோடித் தமிழர்களின் உணர்வும் கொந்தளிப்பும் கோரிக்கையும் உங்களைக் கட்டுப்படுத்தாது என்றால் இனி உங்களது அதிகாரமும்ஆளுமையும்அரசும் எங்களையும் கட்டுப்படுத்தாது!
நீங்கள் எப்படி ஒரு இறையாண்மையுடன் வாழ்கிறீர்களோ அதுபோன்றே தமிழ்த் தேசிய இனமும் தன் இறையாண்மையுடன் இனி வாழத் துடிக்கும்” என்று தமிழர்களத்தின் பொதுச் செயலாளர் அரிமாவளவன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி. தமிழ் இணையங்கள்

Sunday 28 August 2011

வீரமங்கை செங்கொடிக்கு வீரவணக்கம்!

வீரமங்கை செங்கொடி ஏனம்மா இந்த அவசரம்?
தூக்குத்தண்டனைக்காக காத்திருக்கும் மூன்று அண்ணன்மார்களைக் காப்பாற்ற இதைவிட உனக்கு வேறு வழி தெரியவில்லையா? உனது இந்த உயிர்த் தியாகம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மெளனத்தைக் கலைக்குமா? கல்மனம் கொண்ட ஜனாதிபதி பிரதிபா பட்டில் நெஞ்சில் கருணையைப் பிறப்பிக்குமா? கொலைகாரக் காங்கிரசுக்குப் நல்ல புத்தியைப் புகட்டுமா? இத்தாலியக் கழுதை சோனியாவின் கொலை வெறியைத் தணிக்குமா? ஒரு ராஜீவின் உயிருக்காக இன்னும் எத்தனை பேரின் உயிர்களை நாம் காவு கொடுக்க வேண்டும்? தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைக் குடித்தது போதாதா? இன்னும் எத்தனை தமிழர்களின் உயிர் வேண்டும்? முடியாது! இனிமேல் எந்த தமிழரின் உயிரையும் எம்மால் பலி கொடுக்க முடியாது. உனது உயிரே கடைசியாக இருக்கட்டும்! இது நீயேற்றிய ஈகைத் தீயின் மீது நாம் எடுக்கும் சபதமாகும். உனது தியாகம் வீணாகப் போகாது! இது உறுதி!     

Wednesday 17 August 2011

மூன்று முத்துக்கள் தூக்கு கயிற்றில் ???

மூவேந்தர்
முறையோடு
முறையாக நல்லாட்சி
புரிந்த மண்ணில்
மூன்று முத்துக்கள்
தூக்கு கயிற்றில்
கொடுமையிலும்
கொடுமையடா
கேட்பாரில்லாமல்
கேடுகளே தொடரும்
புரிந்திடடா தமிழா
புலியென்று சொல்லிடலாம்
என்ன தவறு செய்தார்
பேரறிவாளன் பெயர் தனை
கழுவிலே எழுதி
காலடியில் வீழ்த்திட
முயற்சியாடா
தமிழக தமிழனின்
எழுச்சியை தடுக்கவே!
தூக்கு மேடை
புதிதல்ல எமக்கு
அதற்கும் மனு நீதி
வேண்டுமடா
வானரங்களின் தீர்ப்பில்
வகை யுண்டோடா
வரலாற்றை மாற்றிட
தடைகளை தகிர்த்திடு
தமிழா தமிழா

நன்றி : நிலவில் ராதா~

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக‌க் குற்றங்கள் பல‌ சாட்டப்பட்டு மரண தன்டனைக்குக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக‌க் குற்றங்கள் பல‌ சாட்டப்பட்டு மரண தன்டனைக்குக் காத்திருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய தமிழர்கள் முவருக்கும் தூக்குத் தண்டை உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பேசப்படுகின்றது. இதனை உள்துறை செயலகம் பரிந்துரை செய்துள்ளதாம். இந்நிலையில் நாம் அவசரமாக செயற்படாவிடில், இந்த அப்பாவிகளின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்படும்.  இவர்களைக் காப்பாற்ற விரும்பினால், உணர்வுள்ள‌ தமிழர்கள் யாவரும் உடனடியாக வீதியில் இறங்கிப் போராட முன் வர வேண்டும். அப்படி செய்ய நேரம் இல்லாதவர்கள் கீழ்வரும் மனுவை இந்திய ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பவும்.
President of India: MISSION PERARIVALAN: An Appeal from the Death Row – The Truth Speaks
http://www.change.org/petitions/supreme-court-of-india-mission-perarivalan-an-appeal-from-the-death-row-the-truth-speaks

Monday 15 August 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஒற்றுமை என்பதே இல்லை

ஆடிப் பாடி மகிழ்கிறோம்

முடிவில் அடிதடியே

ஓங்கி உரத்த குரலில்

ஒலிக்கிறோம்

விடுதலை வேண்டி

ஒருமித்த குரலில்

ஒருங்கினையா மனதுடன்

எட்டு திக்கும்

முரசறைகிறோம்

எங்கள் தமிழென்று

நாம் தமிழர் என்றும்

எட்டி காலில்

பிடித்து இழுத்து

விழுத்துகிறோம்

முன்னேற எம்மினத்தை

விடாது தள்ளுகிறோம் குழியில்

தமிழா ஏனடா

உனக்கு இந்த அற்ப புத்தி

ஏட்டில் எழுதிவிட்டால்

நிலைக்குமாடா ஒற்றுமை

மனதில் விதைத்து

கைகளை இறுக பற்று

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

நன்றி: நிலவில் ராதா.